இங்கிலாந்து அணிக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சிறப்பாக விளையாடிய ரிஷப் பன்ட், சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருடைய ஆட்டத்துக்குப் பின்னணியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் ஆலோசனை இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விமர்சனம் செய்தவர்களுக்கு கிங் கோலி கொடுத்த பதிலடி


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பன்ட் அடித்திருக்கும் முதல் சதம் இது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் சதத்தை அடித்திருந்த அவர், ஒருநாள் போட்டிக்கான முதல் சதத்தையும் அந்த அணிக்கு எதிராகவே இங்கிலாந்து அணியின் சொந்த மண்ணில் பதிவு செய்திருக்கிறார். அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அனுப்பி வருகின்றனர்.போட்டிக்குப் பிறகு டிவிட்டரில் கருத்து தெரிவித்த யுவராஜ் சிங், ரிஷப் பன்டை வாழ்த்தியதுடன், நம் இருவருக்கும் இடையிலான 45 நிமிட உரையாடல் அர்த்தமுள்ளதாக தெரிகிறது ரிஷப் என்றும் கூறியுள்ளார்.



இதன்மூலம் போட்டிக்கு முன்னதாக யுவராஜிடம், ரிஷப் பன்ட் ஆலோசனை கேட்டிருப்பது தெரியவந்திருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஒருகட்டத்தில் 72 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. அப்போது, ரிஷப் பன்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.


மேலும் படிக்க | IPL2023: பிசிசிஐ கொடுத்த அழுத்தம்.. வழிக்கு வந்த ஐசிசி! மாறும் ஐபிஎல் அட்டவணை


ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும், ரிஷப் பன்ட் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்து வின்னிங் ஷாட் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 7வது தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, நாட்வெஸ்ட் தொடரை வென்றதன் 20வது ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், அந்த வெற்றிக்கு மதிப்பு சேர்க்கும் விதமாக கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR