இந்த ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் விரிவடைந்தது தெரிந்ததே. 8 அணிகள் விளையாடி வந்த ஐபில்எல் போட்டி கடந்த ஆண்டு முதல் 10 ஆணிகளாக உயர்ந்துவிட்டது. இதனால், ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை மற்றும் நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. வியாபார ரீதியாகவும் மீடியா நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருப்பதால், இதே கோரிக்கையை முன் வைத்தனர். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும், இது தொடர்பாக ஐசிசி கிரிக்கெட் கூட்டத்தில், பிசிசிஐ சார்பில் பேசப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | விமர்சனம் செய்தவர்களுக்கு கிங் கோலி கொடுத்த பதிலடி
அவர் கூறியது போலவே இந்தியாவின் கோரிக்கை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐபில் போட்டிக்கள் இரண்டரை மாதங்கள் நடைபெற இருப்பதால், அந்த நேரங்களில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படக்கூடாது, அதற்கேற்றார்போல் ஐசிசி அட்டவணை இருக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் லீக்குகளுக்கும் இதேபோன்று சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தின.
விரிவான ஆலோசனையின் முடிவில் பாகிஸ்தானின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டு, பிசிசிஐ அழுத்தத்தால் இந்தியாவின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டது. இனி வரும் நாட்களில் வழக்கமாக நடைபெறும் நாட்களை விட இரண்டு வாரங்கள் கூடுதலாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். மே 2023 முதல் மே 2027 வரை நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகளை இரு பிரிவாக பிரித்து கால அட்டவணையை ஐசிசி தயாரிக்க இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் என்ற அடிப்படையில் அட்டவணை தயாரிக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 74 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுகளில் 84 போட்டிகள் நடைபெறவுள்ளன. 2027 ஆம் ஆண்டு 94 போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR