ஷாக் கொடுத்த பாலிவுட் நடிகை! கடும் கோபத்தில் ரிஷப் பன்ட்
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா கொடுத்த சர்ச்சைக் கருத்து கடும் கோபமாக ரிஷப் பன்ட் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பன்ட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவுடன் டேட்டிங் செய்தாகவும், பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் பேட்டி கொடுத்த ஊர்வசி ரவுடேலா, ஆர்பி என சுருக்கமான ஒரு பெயரை குறிப்பிட்டு அந்த நபர் தன்னை சந்திக்க பல முறை அவர் முயற்சி செய்ததாக தெரிவித்தார். ஒருநாள் மட்டும் சுமார் 16 முதல் 17 மிஸ்டு கால்கள் தன்னுடைய மொபைலில் இருந்ததாக ஊர்வசி தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில், " வாரணாசியில் இருந்து டெல்லிக்கு ஷூட்டிங்கிற்காக வந்தபோது, 'மிஸ்டர் ஆர்பி' என்னை சந்திக்க வந்தார். அவர் லாபியில் காத்திருந்தனர், ஆனால் நான் தூங்கிவிட்டேன். பின்னர் எனது தொலைபேசியில் 16 முதல் 17 மிஸ்கால்கள் இருப்பதை அறிந்தேன். பின்னர் சொன்னேன், நாம் சந்திப்போம் என கூறி அனுப்பிவிட்டேன்" எனக் கூறினார். அவரின் இந்தப் பேட்டி வைரலானது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பன்டை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என கூறினர்.
மேலும் படிக்க | அணிக்கு திரும்பியதும் லக்! இந்திய அணிக்கு கேப்டனான கேஎல் ராகுல்!
இந்த வீடியோவுக்கு ரிஷப் பன்டும் மறைமுகமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார். அதில் பொய்க்கும் ஒரு எல்லை உண்டு. சிலர் வேடிக்கைக்காக நேர்காணல்களில் பொய் சொல்கிறார்கள். இதனால் தலைப்புச் செய்திகளில் இடம் பெற முடியும் என நம்புகிறார்கள். புகழ்ச்சிக்காக இப்படி கூட அவர்கள் செய்வது வேதனையாக இருக்கிறது.
பொய்க்கும் எல்லை உண்டு சகோதரி என தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டுகளில் ஊர்வசி ரவுடேலாவுடன் பேசப்பட்ட ரிஷப் பன்ட், தற்போது டேராடூனைச் சேர்ந்த இஷா நேகியை காதலிப்பதாக கூறப்படுகிறது. ரிஷப் பன்டின் இந்த விளக்கம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ