நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக்

இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் பெயரைக் குறிப்பிட்ட பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளரைக் கேலி செய்து வீரேந்திர சேவாக் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 11, 2022, 04:20 PM IST
  • நீரஜ் சோப்ராவா? ஆசிஷ் நெஷ்ராவா?
  • குழம்பிய பாகிஸ்தான் நபர்
  • குட்டு வைத்த சேவாக்
 நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக் title=

பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த்தில், ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கம் வென்றார், அவர் 90 மீட்டர் தூரத்தை கடந்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அர்ஷத்தை தோற்கடித்து நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். 

மேலும் படிக்க | ரோஹித் சர்மாவால் முறியடிக்க முடியாத விராட் கோலியின் 3 சாதனைகள்!

அர்ஷத்திற்கு பாராட்டு தெரிவித்து பாகிஸ்தானின் தீவிர வலதுசாரி அரசியல் ஆய்வாளரான சைத் ஹமீது  ட்வீட் செய்திருந்தார். அதில், இந்திய ஈட்டி எறிதல் வீரரான ஆசிஷ் நெஹ்ராவை வீழ்த்தியதே, இந்த பாகிஸ்தான் வீரரின் வெற்றியை மேலும் இனிமையாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிஷ், அர்ஷத் நதீமை தோற்கடித்திருந்தார். என்ன ஒரு இனிமையான பழிக்குப்பழி எனக் குறிப்பிட்டிருந்தார். 

நீரஜ் சோப்ராவின் பெயருக்குப் பதிலாக அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவின் பெயரை மாற்றி குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வீரேந்திர சேவாக்,  ”ஆஷிஷ் நெஹ்ரா தற்போது இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். எனவே அவரைக் குறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார். அவரது இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் அல்லாத புதிய கிரிக்கெட் தொடரில் தோனி?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News