இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் எப்போது அணிக்கு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார். காலில் அடிபட்டதால் ரிஷப் பந்தால் நடக்க முடியாமல் போனது, பின்பு தீவிரமான சிகிச்சைக்கு பின்னர் நடக்க தொடங்கினார். கடந்த ஆறு மாதமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வு பெற்று வருகிறார். அவ்வப்போது கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களையும், பயிற்சி பெறும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார் ரிஷப் பந்த். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட 4 பேர் யார் தெரியுமா?


ரிஷப் பந்த் கடைசியாக இந்தியாவுக்காக 2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது அவர் பூரண குணமடைந்து விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பந்த் விளையாட உள்ளார் என்று நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது.  மார்ச் 5 அன்று ரிஷப் பந்திற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து அனுமதி வழங்கப்பட உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு போட்டியில் கூட பந்த் விளையாடவில்லை, உலக கோப்பை, ஐபிஎல், WTC என அனைத்தையும் தவறவிட்டார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் டெல்லி கேபிடல்ஸில் கேப்டன் பதவியை டேவிட் வார்னர் ஏற்றுக்கொண்டார். இந்த ஆண்டு மீண்டும் பந்த் கேப்டன் பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



“ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற கடுமையான பயிற்சிகளை செய்துள்ளார், தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை கூர்ந்து கண்காணித்து வருகிறது. மார்ச் 5 ஆம் தேதி ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்க உள்ளார். அதன் பிறகு டெல்லி அணியுடன் பயிற்சியில் இணைய உள்ளார். ரிஷப் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்ப்போம். NCA அனுமதி வழங்கியவுடன் அவர் பயிற்சியில் சேருவார். விக்கெட் கீப்பிங் செய்வாரா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால் நிச்சயம் விளையாடுவார்" என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி கூறி உள்ளார்.  பந்த் டெல்லி அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி 34.61 சராசரி மற்றும் 147.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,838 ரன்கள் எடுத்துள்ளார். 


மேலும் படிக்க | இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படலாம்...? - இந்த ஒரே ஒரு வழி இருக்கிறது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ