IND vs AUS, Rishabh Pant: கார் விபத்தில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வரும் இந்திய ரிஷப் பந்தின் நேற்றைய சில புகைப்படங்கள், ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IND vs AUS, Rishabh Pant: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் நாக்பூரில் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 


நேற்றைய (பிப். 10) இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 321 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ராகுல், புஜாரா, விராட், சூர்யகுமார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்ப ரோஹித், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர். இடதுகை பேட்டர்களான ஜடேஜா, அக்சர் ஆகியோர் அரைசதங்களை எடுத்த நிலையில், ரோஹித் சதம் அடித்திருந்தார். 


ஜடேஜா, அக்சர் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்குவார்கள். இந்திய அணி தற்போது 144 ரன்களை முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர், ஆஃப் ஸ்பின்னர் டாட் மர்பியிடம் வீழ்ந்தது பெரும் பேசுபொருளாகி உள்ளது.


மேலும் படிக்க | INDvsAUS: ஒரு சதத்தால் சரித்திரத்தில் இடம்பிடித்த ரோகித் சர்மா..! சச்சின் ரெக்கார்டு சமன்


அறிமுக போட்டியில் விளையாடும் மர்பியிடம் விக்கெட்டை பறிகொடுக்கும் அளவில், இந்திய அணி பேட்டர்கள் தவறான ஷாட்களை ஆடி வருவது கவலையளிக்கிறது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சூர்யகுமார், கேஎஸ் பரத் களமிறங்கும் இடத்தில் இறங்கி,  லயான், ஆண்டர்சன் உள்ளிட்ட மூத்த பந்துவீச்சாளர்களை அசால்ட்டாக சந்தித்த ரிஷப் பந்த் தற்போது டெஸ்ட் அணியில் இல்லாதது பெரும் இழப்புதான் எனவும் கூறி வருகின்றனர்.


2020-21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில், ரிஷப் பந்த் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி ஆஸி.,வின் நீண்டகால கோட்டையை சுக்குநூறாக உடைத்தவர். தற்போது, கார் விபத்தால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டுவருகிறார். 



அந்த வகையில், விபத்துக்கு பின்னான தனது முதல் புகைப்படத்தை சில நாள்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்த ரிஷப் பந்த், தான் மீண்டுவருவதை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ரிஷப் பந்த் தான் நடக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து,"ஒரு படி முன்னோக்கி, ஒரு படி வலிமையாக, ஒரு படி சிறப்பாக (One step forward, One step stronger, One step better)" என குறிப்பிட்டிருந்தார்.