விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் மற்றும் இத்தாலியைச் சேர்ந்தகெவின் ஆண்டர்சனும் பல பறிட்சை மேற்கொண்டனர்.



பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற செட் கணக்கில், கெவின் ஆண்டர்சன் வெற்றி பெற்றார். உலகின் 2-ஆம் நிலை வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்


ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் தோல்வி அடைந்து வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆண்டர்சன் தனது முதல் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில், 2016-ஆம் ஆண்டு ரன்னர்-அப் மிலோஸ் ரனோனி அல்லது ஒன்பதாவது விதை ஜோன் இஸ்னர் ஆகியோரை எதிர்கொள்வார் என தெரிகிறது.