ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார் ரோகித் ஷர்மா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகிறது.


இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 



இப்போட்டியில் சிறப்பான துவக்கம் அளித்த ரோகித் ஷர்மா 70 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2000 ரன்கள் குவித்த வீரர்கள் என்னும் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார். 


இப்பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 3077 ரன்களுடன் முதல் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி ஹெய்ன்ஸ் 2262 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்திலும், விவி ரிச்சர்ட்ஸ் 2187 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இன்றைய போட்டியை அடுத்து 2037 ரன்களுடன் ரோகித் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் டோனி முறையே 1645 மற்றும் 1633 ரன்களுடன் 9-வது மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.