ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைப்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா ‘துவக்க வீரராக 7000 ரன்கள்’ குவித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இரு அணிக்கும் இடையே நடைப்பெற்ற மும்பை முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசதில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்று ராஜ்காட், சௌராஸ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.


இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. அணியில் அதிக பட்சமாக ஷிகர் தவான் 96(90) ரன்கள் குவித்தார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 42(44) ரன்கள் குவித்தார்.


இதன் மூலம் அவர் துவக்க வீரராக களமிறங்கி மிக விரைவில் 7000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையினையும் பெற்றார். இந்த சாதனையினை 137 இன்னிங்ஸில் படைத்துள்ள ரோகித் சர்மா, முன்பு தென்னப்பிரிக்கா வீரர் ஆம்லா (147 இன்னிங்ஸ்) பெயரினை இரண்டாம் இடத்திற்கு தள்ளினார். மேலும் துவக்க வீரராக களமிறங்கி 7000 ரன்கள் குவித்த நான்காவது வீரராகவும் ரோகித் சர்மா பெயர் பெற்றுள்ளார்.


ரோகித் சர்மாவுக்கு முன்னதாக, இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி மற்றும் சேவாக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, இந்திய தொடக்க ஆட்டக்காரர் மிக விரைவில் 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்ற மூன்றாவது வீரர் என அங்கிகரீக்கப்படுவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சாதனையினை 4 ரன்களில் அவர் தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும் ஒருநாள் போட்டியில் ரோகித் 4 ரன்கள் குவித்தால் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 9000 ஒருநாள் ஓட்டங்கள் பெற்றொர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.