புது டெல்லி: ஐ.பி.எல் (IPL 2021) இன் 14 வது சீசன் தற்போது உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் தற்போது புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திலும், ரோகித் சர்மாவின் (Rohit Sharma) மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஐ.பி.எல் சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி, கொல்கத்தாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், இந்த போட்டிக்கு முன்பு, ஆன்லைன் உணவு விநியோக பயன்பாடான ஸ்விகி (Swiggy) ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது. உண்மையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மும்பை கேப்டன் ரோகித் சர்மா (Rohit Sharma) குறித்து ஸ்விகி கருத்து தெரிவித்துள்ளது. இந்த மோசமான கருத்தால் BoycottSwiggy என்ற ஹேஷ்டாக் சமூக ஊடகங்களில் கடுமையாக டிரெண்ட் ஆகி உள்ளது.



போட்டிக்கு முன்பு, ஒரு பயனர் ரோகித்தின் திருத்தப்பட்ட படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதில் ரோகித் வாடா பாவிற்கு பாய்வதைப் போல காணலாம். இந்த படத்தை ரீ-ட்வீட் செய்யும் போது ஸ்விகி ஒரு மோசமான கருத்து தெரிவித்து. அதில்., இதை வெறுப்பவர்கள் இது ஃபோட்டோஷாப் என்று கூறுவார்கள் என்று ஸ்விகி பதிவிட்டுள்ளது.


ALSO READ | IPL 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்


ஆனால் அதற்குள்ளாகவே ஸ்விகியை சமூகவலைதளங்களில் வறுத்தெடுக்க துவங்கி விட்டனர் ரசிகர்கள். இது ஒரு மோசமான விளம்பரம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை விளையாட்டாகவே செய்திருந்தது ஸ்விகி. ஆனால் ஸ்விகியை புறக்கணிப்போம் என்ற ஹாஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.


நமது மேட்ச் வின்னரை ஸ்விகி அவமரியாதை செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு கமெண்ட்டை ஸ்விகியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR