டாஸ் போடும்போது மும்பையில் உணர்ச்சிவசப்பட்ட ரோகித் சர்மா
மும்பை வான்கடே மைதானத்தில் டாஸ் போடும்போது உணர்ச்சிவசமான ரோகித் சர்மா, சொந்த மைதானத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியை வழிநடத்துவது பெருமைக்குரிய விஷயம் என கூறினார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மென்டிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். மும்பை மைதானத்தைப் பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். குறிப்பாக இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் இங்கு வெற்றியை உறுதி செய்யலாம். இதனை மனதில் வைத்து குஷால் மென்டிஸ் டாஸ் ஜெயித்தவுடன் பவுலிங் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மா கண்ணீர்
ரோகித் சர்மாவுக்கு மும்பை சொந்த ஊர். மும்பை வான்கடே மைதானத்தில் சிறு வயதில் இருந்து பல நூறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த மைதானத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பையில் தலைமை தாங்குவது என்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயமாகும். இதனையே தான் ரோகித் சர்மாவும் கூறினார். டாஸ் போடும்போது பேசிய கேப்டன் ரோகித் சர்மா, " உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக வான்கடேவில் விளையாடும் முதல் போட்டி. அதுவும் முதலில் பேட்டிங் செய்கிறோம். வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என தெரிவித்தார். அதன்பிறகு தேசிய கீதம் ஒலிக்கும்போது கேமராமேன் ரோகித் சர்மாவையே ஃபோகஸ் செய்தார். அப்போது மிகவும் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்... ஷாக் ஆன ஜடேஜா - வீடியோவை பாருங்க!
உலக கோப்பை வெற்றி
2011 உலக கோப்பை இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் தான் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதின. இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி வெற்றிப் பெற்று உலக கோப்பை மகுடத்தைக் கைப்பற்றியது. தோனி அப்போது மலிங்கா ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கான ரன்களை எட்டுவார். இன்று வரை தோனி அந்த ஒரு ஷாட்டை கிரிக்கெட் ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்தியா - இலங்கை அணிகள் மீண்டும் உலக கோப்பை போட்டியில் இன்று தான் வான்கடேவில் மோதுகின்றன.
உலக கோப்பை புள்ளிப்பட்டியல்
உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 6 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்திலும், இந்திய அணி ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்யும்.
மேலும் படிக்க | உலகக் கோப்பை: அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ