இந்திய அணியின் அடுத்த கேப்டன்... ரோகித் சர்மா கொடுத்த சிக்னல்
Rohit Sharma | இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த முழுநேர கேப்டன் யார்? என்ற சிக்னலை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா கொடுத்துள்ளார்.
Rohit Sharma News | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. மோசமான பார்ம் காரணமாக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்தே அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன. அதற்கு ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறும் எண்ணம் இன்னும் வரவில்லை என்றும், இப்போது என்னைப் பற்றி வரும் அனைத்து செய்திகளும் வதந்திகளே என்றும் அவர் தெரவித்துள்ளார். மேலும், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாததற்கு நான் எடுத்த முடிவு என்றும் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.
ரோகித் சர்மா பேட்டி
ரோகித் சர்மா இது குறித்து பேசும்போது, " சிட்னி டெஸ்ட் போட்டியில் மோசமான பார்ம் காரணமாக நான் விளையாடவில்லை. என்னுடைய பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. அதனால் நானே அணி நிர்வாகத்திடம் இப்போட்டியில் நான் விளையாடவில்லை என கூறினேன். அணி நிர்வாகம் அல்லது பயிற்சியாளர்கள் என யாரும் அணியில் இருந்து நீக்கவில்லை, ஓய்வெடுக்க சொல்லவில்லை. இப்போதைக்கு ஒதுங்கியிருக்கிறேன். ஆனால் ஓய்வு என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படியாக வரும் எந்த செய்திகளிலும் உண்மையில்லை." என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!
கவாஸ்கரி - ரவி சாஸ்திரி மீது விமர்சனம்
தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, 'நான் நிறைய கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. விஷயங்கள் மாறும் என்று நான் நம்புகிறேன். மைக்கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர்களோ, மடிக்கணினியை கையில் வைத்துக் கொண்டு எழுதுபவர்களோ என் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாது’ என காட்டமாக கூறினார். சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டி ஆடிவிட்டார், அவர் மீண்டும் இந்திய அணிக்கு ஆடுவார் என நினைக்கவில்லை என மோசமான பார்மில் இருந்த ரோகித் சர்மா குறித்து விமர்சனம் செய்திருந்தனர். அவர்களுக்கு இந்த பேட்டியில் பதிலடி கொடுத்திருக்கிறார் ரோகித் சர்மா.
ரோகித் சர்மா கோபம்
’நான் எப்போது செல்ல வேண்டும், எப்போது விளையாடக்கூடாது என்பதை இவர்களால் தீர்மானிக்க முடியாது. எனக்கும் முதிர்ச்சி இருக்கிறது. நான் இரண்டு குழந்தைகளின் தந்தை, அதனால் எனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதில் எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கிறது. என் மனதில் நடக்கிறது என்பதை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களிடம் கூற விரும்பினேன். அவர்களும் என் முடிவை ஆதரித்தனர்’ ரோகித் சர்மா தெரிவித்தார். மேலும், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை நானே ஏற்பேன் என்றும் இந்த பேட்டியில் சூசகமாக தெரிவித்தார். அதனால், விரைவில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவே வரவுள்ளார் என்பது தான் இப்போதைய ஹாட் நியூஸ்.
மேலும் படிக்க | IPL 2025: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்து சுப்மான் கில் நீக்கம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ