20 ஓவர் கிரிக்கெட்டில் இப்போதைக்கு அந்த முடிவை எடுக்க மாட்டேன்; ரோகித் சர்மா
Rohit Sharma: 20 ஓவர் கிரிக்கெட்டில் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. நீண்ட ஓய்வில் இருந்த விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருப்பது என்பது எந்த ஒரு வீரராலும் முடியாது. நிச்சயம் வீரர்களுக்கு ஓய்வு அவசியம்.
20 ஓவர் உலக கோப்பை முடிந்த பிறகு எனக்கு கிடைத்த ஓய்வை நன்கு பயன்படுத்திக் கொண்டேன். காயமும் குணமடைந்துவிட்டது. இந்திய அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. இப்போதைக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. நியூசிலாந்து, வங்கதேசம் என அடுத்தடுத்து தொடர்கள் தொடர்ச்சியாக அனைத்து வீரர்களும் விளையாடியுள்ளனர். அவர்களின் உடல் தகுதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக ஐபிஎல் உள்ளிட்ட பெரிய போட்டிகள் வர இருக்கின்றன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு என்னுடைய 20 ஓவர் பயணம் குறித்த முடிவு தெளிவாக இருக்கும். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை சுப்மான் கில் என்னுடன் ஓப்பனிங் இறங்குவார். எதிர்பாராதவிதமாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. அவருக்கு இன்னும் பந்துவீசுவதில் சில அசௌகரியம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால், அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: இந்த 5 சிஎஸ்கே வீரர்களுக்கு ஐபிஎல் 2023-ல் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ