விராட் கோலியின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்திய அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி மொஹாலியில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில், டி20யில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடிக்க கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. அவர் இதுவரை 115 டி20 போட்டிகளில் 52.73 என்ற சிறந்த சராசரியில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோஹித் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | IND vs AFG: முதல் டி20யில் விராட் கோலி விளையாட மாட்டார்! ரசிகர்கள் அதிர்ச்சி!
ரோஹித் இதுவரை 148 போட்டிகளில் 31.32 சராசரியில் 3853 ரன்கள் எடுத்துள்ளார். 4 ஆயிரம் ரன்களை தொட ரோஹித்துக்கு இன்னும் 147 ரன்கள் தேவை. அத்துடன் அதிக ரன்கள் எடுத்திருக்கும் விராட் கோலியின் சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் விளையாட மாட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த தொடரில் விராட் கோலியைவிட கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலியின் இந்த சாதனைகளை எளிதாக முறியடிக்க முடியும். அந்தவகையில் ஆப்கானிஸ்தான் தொடர் முடியும்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சர்வதேச கிரிக்கெட் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த தொடரில் மற்றொரு அதிசயமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை ஒப்பனிங் இறக்க ராகுல் டிராவிட் திட்டம் வைத்திருக்கிறாராம். முதல் போட்டியில் விராட் கோலி விளையாடாமல் உள்ளதால், அந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்குவார்கள். இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பியவுடன் ரோகித் சர்மாவுடன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மத்துல்லா உமர்ஜாய், எஃப் ரஃபுத்தீன், ஷரஃபுத்தீன், எஃப். ஃபரித் அகமது, நவீன்-உல்-ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது மற்றும் குல்பாடின் நைப்.
மேலும் படிக்க | IND vs AFG: ஜிதேஷ் சர்மாவா? சஞ்சு சாம்சனா? ரோஹித் எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ