நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 2ஆம் நாள் ஆட்டத்தை அஸ்வினுடன் தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு என இருமுனை தாக்குதல்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் சதத்தை நோக்கி முன்னேறினார். இந்திய அணியின் அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும், அவரால் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த டெஸ்ட் தொடரில் தான் களமிறங்கியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோகித் சர்மா சதம்



பெரும் எதிர்பார்ப்பு அவர் மீது இருந்த நிலையில், அதனை சதமடித்து பூர்த்தி செய்திருக்கிறார் கேப்டன் ரோகித். முதல் இன்னிங்ஸில் 212 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, 15 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் விளாசி தன்னுடைய 9வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 120 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்த ஒரு சதம் மூலம் ரோகித் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


மேலும் படிக்க | INDvsAUS: இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் டாட் மர்பி...! யார்?


ரோகித் சர்மா சாதனை



ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அடித்திருக்கும் சதம், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்த 9வது சதமாகும். இந்த சதம் மூலம் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை ரோகித் சர்மா வசம் சென்றுள்ளது. ஓப்பனராக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 9 சதங்கள் அடித்திருக்கும் நிலையில் அதனை ரோகித் சமன் செய்துள்ளார். 


ஆஸ்திரேலியா என்றால் இஷ்டம்



ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடிய ரோகித் சர்மா, இந்த போட்டியிலும் அதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியே உலக டெஸ்ட் சாம்ப்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.



அதனால், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்திய அணி உள்ளது. அதற்கேற்ப இந்திய அணியின் இப்போதைய ஆட்டமும் சிறப்பாக இருக்கிறது. கேப்டன் என்கிற முறையில் ரோகித் சர்மாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.


மேலும் படிக்க | IND vs AUS: ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? உண்மை வெளியானது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ