ICC தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான்!
ICC தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை ஷிகர் தவான் பிடித்துள்ளார்.
ICC தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை ஷிகர் தவான் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் தனது 3-வது உலக கோப்பை சதம் அடித்ததன் மூலம் ICC தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை தவான் பிடித்துள்ளார்.
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன
இப்போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்து வெளியேறிய ஷிகர் தவானுக்கு இது 3-வது உலக கோப்பை சதமாகும்.
இதன் மூலம் ICC தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை) 6 சதங்கள் விளாசிய வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இதன்மூலம் ICC தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், சங்ககராவுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், கங்குலி தலா 7 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.