Rohit Sharma vs Gautam Gambhir : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கவுதம் கம்பீர், தன்னுடைய பணியை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தொடங்கினார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரை ஒருதோல்வி கூட அடையாமல் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியைகூட பெறாமல் தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி இழந்திருக்கிறது. இது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஏற்பட்டிருக்கும் முதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணி தேர்வில் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணமாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது? இந்தியர்களின் கடைசி நம்பிக்கை - இன்றைய அட்டவணை


கவுதம் கம்பீர் - ரோகித் சர்மா மோதல் பின்னணி


இலங்கை தொடரில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோகித் சர்மா இடையே அணி தேர்வில் மனகசப்பு உருவாகியிருக்கிறது. கவுதம் கம்பீர் விக்கெட் கீப்பர் ஆப்சனாக கே.எல்.ராகுலை முன்னிறுத்த, ரிஷப் பந்த் அந்த இடத்தில் விளையாட வேண்டும் என ரோகித் சர்மா விரும்பியிருக்கிறார். இருப்பினும் முதல் இரண்டு போட்டியிலும் விளையாட வாய்ப்பு பெற்ற ராகுலுக்கே விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ராகுல் எதிர்பார்த்தபடி ஆடவில்லை. இதனால், மூன்றாவது போட்டியில் வெளியே உட்கார வைக்கப்பட்டார். அந்த இடத்தில் ரிஷப் பந்த் விளையாடினார். 


கம்பீர் அணுகுமுறைக்கு ரோகித் எதிர்ப்பு


அவரும் தன் பங்குக்கு சொதப்ப, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இருவருமே எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்றாலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அணி தேர்வில் கம்பீர் தலையிடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. இருவரும் ஒன்றாக இணைந்த முதல் சர்வதேச தொடரே மோதலுடன் ஆரம்பித்திருப்பதால் அடுத்தடுத்த தொடர்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தனை நாள் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் என்னுடன் பயிற்சியாளர்கள் யாரும் அணி தேர்வு விஷயத்தில் தலையிட்டதில்லை, ஆலோசனை மட்டுமே வழங்கினார்கள். 


ஆனால் கம்பீர் அணியையே அவருடைய விருப்பப்படி தேர்வு செய்ய நினைக்கிறார் என்கிறாராம் ரோகித். இதுவே இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தற்கும் காரணம் என்றும் ரோகித் தரப்பு கூறுகிறது. இந்த மோதல் விவகாரம் பிசிசிஐ கவனத்துக்கும் சென்றிருப்பதால், அது குறித்து விரைவில் தீர்க்கமான ஆலோசனையை தேர்வுக்கு பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் வழங்க உள்ளது. 


மேலும் படிக்க | IND vs SL : கவுதம் கம்பீரால் 27 வருஷத்துக்குப் பிறகு இந்திய அணிக்கு கிடைத்த அவமானம்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ