2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் ரோஹித் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் அவரது கேப்டன்சியின் முதல் போட்டியிலேயே ரோஹித்தின் பெயரில் தேவையில்லாத சாதனை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அவர் விரும்பாமல் போனால்கூட, இந்திய அணியின் கிரிக்கெட் புத்தகத்தில் ரோகித்தின் இந்த சாதனையும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | INDvsSL: டிராவிட் - கோலி பரிமாறிக் கொண்ட உருக்கமான வார்த்தைகள்


ரோகித் சர்மாவின் சாதனை


இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் ரோகித் சர்மாவின் கீழ் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் 35வது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். அதேநேரத்தில் மற்றொரு சாதனையும் அவர் வசம் வந்துள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் 2வது வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 34 வயது 308 நாட்களில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகியுள்ளார் ரோகித். முதல் இடத்தில் அனில் கும்பிளே இருக்கிறார். அவர் 37 வயது 36 நாட்களில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று, இந்திய டெஸ்ட் அணிக்கு அதிக வயதில் தலைமை தாங்கிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். 



5வது கேப்டன் ரோகித் சர்மா


இந்திய அணியின் மூன்றுவடிவ போட்டிகளுக்கும் தலைமை தாங்கும் 5வது கேப்டன் ரோகித் சர்மா. விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித், பின்னர் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இலங்கை தொடரில் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவருக்கு முன்பாக விராட் கோலி, மகேந்திரசிங் தோனி, வீரேந்திர சேவாக், அஜிங்கியா ரஹானே ஆகியோர் இந்திய அணியின் மூன்று வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளனர். 


மேலும் படிக்க |  ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR