உலகக் கோப்பை 2023: இந்திய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் சென்னை மண்ணின் மைந்தரான அஸ்வின் இந்திய அணிக்காக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவரும் அதற்கேற்ப தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக பேட்டிங் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டதால் ஒருவேளை ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் பேட்டிங் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | AFG vs BAN: எங்கே வெற்றியை கோட்டைவிட்டது ஆப்கான்? - கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன்


ஏனென்றால், ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கிய சுப்மான் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் களமிறக்கப்படாதபட்சத்தில் யார் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என கேள்வி இருக்கிறது. ஒருவேளை சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கிறது. மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் இஷான் கிஷன் ஓப்பனிங் இறக்கலாமா? அல்லது பேட்டிங் விளையாடும் ஆல்ரவுண்டரான அஸ்வினை ஓப்பனிங் இறக்கலாமா? என்ற குழப்பத்தில் இந்திய அணி இருக்கிறது. 


ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்வதை பொறுத்தவரை இந்திய அணி வலிமையாகவே இருக்கிறது. ஏனென்றால் அண்மையில் நிறைடைந்த அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி தான் வென்றது. இருப்பினும் ஐசிசி தொடர் என்றால் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் எப்போதும் வேறு மாதிரியாக இருக்கும். இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டதுடன், அவர்களை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


சென்னை அணியின் பிட்சை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க திட்டமிட்டுள்ளது. அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மூவரும் சுழற்பந்துவீச்சாளர்கள். வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா இடம்பெறுவார்கள். முகமது ஷமிக்கு வாய்ப்பு இருக்காது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். சூர்யகுமார் யாதவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டால், சுப்மான் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங் இறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த இடத்தில் அஸ்வினை இறக்கலாமா? என்ற யோசனையும் இப்போதைக்கு இந்திய அணியிடம் இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான விளையாடும் பிளேயிங் லெவனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 


மேலும் படிக்க | IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் ஏன் இடம்பெறுவார்? 6 காரணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ