Cricket: இந்திய அணியில் 10 மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும் 2 தலைகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக ஒன்றாக விளையாட உள்ளனர்.
கிரன் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்காத ரோகித் ஷர்மா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார்.
ALSO READ | India Squad: குல்தீப் Come Back..! ஓரம்கட்டப்படும் சீனியர் வீரர்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 20 ஓவர் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தாலும், ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடங்குகிறார் ரோகித். இதனால் அவரது தலைமையிலான இந்திய அணியின் செயல்பாட்டை அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில், ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் ஏறத்தாழ 10 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாக விளையாட உள்ளனர்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு அவதிப்பட்ட ரோகித் ஷர்மா கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி புனேவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு காயத்தில் இருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பினாலும் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ALSO READ | கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தீ விபத்து! சமூக ஊடகஙகளில் வைரலாகும் வீடியோ
பின்னர் மீண்டும் காயமடைந்ததால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போனது. இப்போது, உடல் எடையை குறைத்து, சரியான பிட்னஸூடன் களத்துக்கு திரும்பியிருக்கும் அவர், முன்னாள் கேப்டன் கோலியுடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR