பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் தொடங்குகிறது. தலா 3 ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த இரண்டு வடிவிலான தொடர்களிலும் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.
ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்
தென்னாப்பிரிக்கா தொடரில் வெள்ளைப்பந்து அணியில் இடம்பிடித்திருந்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக அவர் சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியானாலும், பிசிசிஐ அறிக்கையில் அந்தக் காரணம் குறிப்பிடப்படவில்லை. இதனால், இந்திய அணிக்கான வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வினுக்கான இடம் இனி கேள்விக்குறியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது இடத்துக்கு குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால், இந்திய ஒருநாள் போட்டியில் சாஹல் - குல்தீப் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா, இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். முகமது ஷமி மற்றும் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜடேஜாவுக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என தெரிவித்துள்ள பிசிசிஐ, முதன்முறையாக ரவி பிஸ்னோய்க்கு 20 ஓவர் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளது.
ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்..!
டெல்லி வேகப்பந்துவீச்சாளர் ஆவேஸ்கான், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய் ஆகியோர் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடேஷ் ஐயருக்கு 20 ஓவர் தொடரிலும், ருத்ராஜ் கெய்க்வாட் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாமல், 20 ஓவர் தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR