நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டரில் நங்கூரமாக திகழ்பவர் ராஸ் டெய்லர் (Ross Taylor). டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விரைவில் விடைகொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவருடைய ஆசை என்னவென்றால், 50 ஓவர் உலகக்கோப்பையை ஒருமுறையாவது நியூசிலாந்து அணிக்கு பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த ஆசை மட்டும் இதுவரை அவருக்கு நிறைவேறவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து இருமுறை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், இரண்டு முறையும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. அதனால், 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டி வரை விளையாட திட்டமிட்டிருந்த ராஸ்டெய்லர், திடீரென அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுப்பதாக அறிவித்துள்ளார். 


ALSO READ | ஆஷஸ் தொடரை வென்று சாதித்து காட்டிய ஆஸ்திரேலியா!


37 வயதாகும் ராஸ்டெய்லர், 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளிலும், 233 ஒருநாள் போட்டிகளிலும், 102 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்காக மூன்றுவடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிக்கு மேல் விளையாடிய முதல் வீரர் என்ற சர்வதேச சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் ராஸ் டெய்லர் முதல் இடத்தில் உள்ளார். 


டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் 290 ரன்கள் விளாசியதும், முதன்முறையாக நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வெற்றி பெற்று கொடுத்ததும் ராஸ் டெய்லரின் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான தருணங்களாகும். ஓய்வு குறித்து டிவிட்டரில் அறிவித்துள்ள ராஸ்டெய்லர், " நியூசிலாந்து அணியுடனான பயணம் மிகச்சிறப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் தேசத்திற்காக விளையாடியதை நினைத்து பெருமைக் கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்தவகையில் எனது கிரிக்கெட்டிற்கும் முடிவு வந்துவிட்டதாக கருதுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.


ALSO READ | பாஜகவில் இணைந்த மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!


வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுக்கும் ராஸ்டெய்லர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளை முடித்தவுடன், குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விடைபெறுகிறார். அவருக்கு கிரிக்கெட் உலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR