ஐக்கிய அமீரகம் புறப்பட்டது ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி!
ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இன்று ஐக்கிய அமீரகம் புறப்பட்டது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இன்று ஐக்கிய அமீரகம் புறப்பட்டது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
இந்த வருடம் நடக்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள ஐக்கிய அமீரகம் புறப்பட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்திய உள்ளூர் வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் கூடுதல் நிர்வாகிகளுடன் இன்று ஐக்கிய அமீரகத்திற்கு விமானம் மூலம் சென்றது ஆர்சிபி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி கொண்டிருப்பதால் ஆர்சிபி அணியின் மீதமுள்ள வீரர்கள் மட்டும் தற்போது ஐக்கிய அமீரகம் சென்றுள்ளனர். ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதற்கு 3 நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஸ்ரீலங்கா அணியில் சிறப்பாக விளையாடி வரும் அசரங்காவை ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக அணியில் சேர்த்தது ஆர்சிபி நிர்வாகம். மேலும் சமீரா, ஜார்ஜ் மற்றும் டிம் டேவிட் என மொத்தமாக நான்கு பேரை அணியில் சேர்த்துள்ளது ஆர்சிபி.
இன்று மதியம் சார்ட்டட் ஃபிளைட் மூலம் பெங்களூர் அணி வீரர்கள் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளனர். தனிமைப்படுத்தல் முடிந்தபிறகு பயிற்சியில் ஈடுபடுவோம் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி நடக்க உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட உள்ளது ஆர்சிபி. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் 7 போட்டிகளில் விளையாடி அதில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது ஆர்சிபி. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி, இந்த முறை வெற்றி பெற கடுமையாக முயற்சித்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, மும்பை மற்றும் சென்னை அணிகள் தனிமைப்படுத்தல் முடிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் 2021 போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளது.
ALSO READ IPL 2021: சிஎஸ்கே அணியில் சிறந்த 11 வீரர்கள் யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR