பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடுகிறது. ஏற்கனவே புனே அணியும், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் இன்றைய ஆட்டம் பெங்களூரு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் 6 போட்டியில் வெற்றி கண்டு 12 புள்ளிகளை பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேற வேண்டும் என்றால் நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.


எனவே இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதி. கெயில், விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் நல்ல பார்மில் உள்ளதால் இன்று நடக்கும் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.