T20 World Cup இல் வைல்ட் கார்டு என்ட்ரி; ருதுராஜ் கெய்க்வாட்க்கு அதிக வாய்ப்பு
IPL 2021 இல் சிஎஸ்கே பேட்ஸ்மேன் ரிதுராஜ் கெய்க்வாட்டின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.
புதுடெல்லி: ஐபிஎல் 2021 இன் 47 வது போட்டியில், சிஎஸ்கே ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு 7-விக்கெட் வித்யாசத்தில் வெற்றியை தந்தனர். இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்து இருந்தது, ஆனால் இந்த போட்டி அவர்களின் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய விதம் மறக்கமுடியாததாக இருந்தது. இந்தப் போட்டியில் கெய்க்வாட் அசத்தலான சிறந்த சதம் அடித்தார்.
ரிதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 60 பந்துகளில் 168.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடினார். இந்த இன்னிங்ஸில் அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கெய்க்வாட் 20 வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது ஐபிஎல் வாழ்க்கையில் முதல் சதமாகும். இதன் மூலம், இந்த ஐபிஎல் சீசனில் சதம் அடித்த நான்காவது பேட்ஸ்மேனாக அவர் ஆனார்.
ALSO READ | CSK vs RR: செம ஆட்டம்... சென்னை அணியை கதறவிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்
கெய்க்வாட்டின் சாதத்திற்கு பிறகு, 2021 டி20 உலகக் கோப்பையில் அவர் வைல்ட் கார்டு நுழைவு பெற முடியும் என்பதையும் வலியுறுத்தப்படுகிறது. கெய்க்வாட் இந்த ஆண்டு சிறந்த பார்மில் உள்ளார், அசத்தலான விளையாட்டை வெளிபடுத்திய அவர் தற்போது ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கொடுத்தால் அது ஆச்சரியமில்லை. இதற்கிடையில் அக்டோபர் 10 வரை டி 20 உலகக் கோப்பை அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
ரித்துராஜ் கெய்க்வாட் 2020 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஐபிஎல் இல் அறிமுகமானார். 18 போட்டிகளில், அவர் மொத்தம் 712 ரன்களை 50.85 சராசரியாக 134.08 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முடித்துள்ளார். அவர் இதுவரை 1 சதம் மற்றும் 6 அரைசதங்களை அடித்துள்ளார். அதே நேரத்தில், இந்த ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, கெய்க்வாட் இந்திய அணிக்காக தனது சர்வதேச அறிமுகத்தையும் செய்தார்.
ALSO READ | டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR