பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.90 லட்சம் வழங்கிய சச்சின்!
ராஜ்யசபா MP-யாக இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்!
புதுடெல்லி: ராஜ்யசபா MP-யாக இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜ்யசபா MP-யாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில். தற்போது தான் MP-யாக பதவியில் இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் மற்றும் படிகள் என முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
பார்லிமென்ட் நடவடிக்கைகளில் சரியாக அவர் கலந்து கொள்ளவில்லை என பலர் விமர்சனங்கள் வைத்தப் போதிலும், தொகுதி வளர்ச்சி நிதியை அவர் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.
கல்வி மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக அவர் 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மேலும், ஆந்திராவில் உள்ள புத்தம் ராஜூ கந்திரிகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோஞ்சா கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தான் MP-யாக இருந்த 6 வருடத்தில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் இதர படிகள் என கிடைத்த ரூ.90 லட்சத்தினை பிரதமர் நிவாரண நிதிக்கு அவர் அளித்துள்ளார்.
சச்சினின் இந்த நடவடிக்கையால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்னம் உள்ளது.