கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியின் பங்குகளை விற்றுவிட்டு, ஐ.எஸ்.எல்-யில் வெளியேறி இருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட்க்கு IPL அணிகள் இருப்பதுபோல், கால்பந்துக்கு இந்திய சூப்பர் லீக் போட்டிக்கு ISL அணிகள் உள்ளன. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் புட்பால் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 


சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை ஊக்கப்படுத்தி வந்தார். ஆனால், திடீர் முடிவாக, அணியின் பங்குகளை விற்பனை செய்திருப்பது கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் 20 சதவிகிதப் பங்குகளைச் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்ததாகவும், அதனை ஹைபர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களை அதிகளவில் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரே சச்சின் டெண்டுல்கரின் பங்குகளை வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.