இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளரும், துரோணாச்சாரியர் விருது பெற்றவருமான ராமாகந்த் அச்ரேக்கர் புதன் அன்று தனுத 87-வது வயதில் மும்பையில் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது முதிவு காரணமாக ராமாகந்த் உயிர் இழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 



சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே, பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர்.


அச்ரேக்கரிடம் சச்சின் டெண்டுல்கரை அறிமுகப்படுத்தியது அவரது சகோதரர் அஜித். சிவாஜி பார்க் மைதானத்தில் சச்சின் அச்ரேக்கரின் கீழ் தன் கிரிக்கெட் வாழ்வை உருப்படுத்திக் கொண்டார். அதிலிருந்து குரு-சிஷ்ய உறவு இருவருக்கும் இடையே உறுதியாக வளர்ந்து வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெற்ற போது அச்ரேக்கரின் பங்கை பெரிய அளவில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.


இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அச்ரேக்கரின் இழப்பு குறித்து தெரிவித்துள்ளதாவது...


அச்ரேக்கர் சாரினால் சொர்க்கத்தில் கிரிக்கெட் வளமை பெறும். பல மாணவர்களைப் போல் நானும் சாரின் வழிகாட்டுதலில்தான் கிரிக்கெட் ஏபிசிடி-யைக் பயின்றவன். என் வாழ்க்கையில் அவரது பங்களிப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில்தான் நான் இன்று நிற்கிறேன்.


கடந்த மாதம்தான் நான் அச்ரேக்கர் சாரை அவருடைய மாணவர்கள் சிலருடன் சென்று பார்த்தேன். சேர்ந்து உரையாடி மகிழ்ந்தோம். நகைச்சுவையைப் பகிர்ந்து கொண்டோம் பழைய காலங்களை அசைபோட்டோம்.நேராக விளையாடுவது நேர்மையாக வாழ்வது ஆகிய அறங்களை அச்ரேக்கர் சார் எங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். 



அவரது வாழ்க்கையின் ஓர் அங்கமாக எங்களை இணைத்துக் கொண்டதற்கும் உங்கள் பயிற்சி முறைகளில் எங்களை வளப்படுத்தியதற்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். வெல் பிளேய்டு சார்... நீங்கள் எங்கு இருந்தாலும் இன்னும் பயிற்சி அளிப்பீர்கள். என குறிப்பிட்டுள்ளார்.