IPL-க்கு முன் சச்சின் மகன் Arjun Tendulkar-க்கு பெரிய ஏமாற்றம்: அணியில் பெயர் இல்லை
அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டு முதல் முறையாக சீனியர்களுக்கான அணியில் சேர்ந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளார். விஜய் ஹசாரே டிராபி 2021 க்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அர்ஜுனின் பெயர் இடம் பெறவில்லை.
மும்பை அணியில் அர்ஜுன் இல்லை
பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கவுள்ள விஜய் ஹசாரே டிராபிக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா மும்பை அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் இதில் இடம் பெறவில்லை.
மும்பை கிரிக்கெட் சங்கம், 50 ஓவர் சாம்பியன்ஷிப்பிற்கான 22 பேர் கொண்ட அணியில் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) மகனை சேர்க்கவில்லை.
அர்ஜுனின் மோசமான ஃபார்ம்
அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) இந்த ஆண்டு முதல் முறையாக சீனியர்களுக்கான அணியில் சேர்ந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் லிட் இ லீக் குழு போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அவர் இரண்டு ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 21 ரன்களைக் கொடுத்தார்.
ALSO READ: IND vs Eng: இங்கிலாந்து அணி அபார வெற்றி, வீணானது விராட் கோலியின் அரைசதம்
சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான அணியின் ஒரு பகுதியாக அர்ஜுன் டெண்டுல்கர் இருந்தார். ஆனால் பயிற்சி போட்டிகளில் அவரது செயல்திறன் மிகவும் மோசமாக இருந்தது. அவர் பயிற்சி போட்டிகளிலும் நல்ல வகையில் பந்து வீச போராடினார். போட்டியின் ப்ராக்டீஸ் போட்டிகளில், அர்ஜுன் டெண்டுல்கர் டி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடினார். ஆனால் அவரது செயல்திறன் பந்துவீச்சிலும் பௌலிங்கிலும் மோசமாகவே இருந்தது.
அவர் விளையாடிய 4 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 3 முறை பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வீரர்களுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது
விஜய் ஹசாரே டிராபிக்கான (Vijay Hazare Trophy) மும்பை அணியில் பேட்டிங்கில் இந்திய ஆல்ரவுண்டர் சிவம் தூபே, வரையறுக்கப்பட்ட ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சூர்யகுமார் யாதவ், இளம் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி, சர்ஃப்ராஸ் கான் மற்றும் அகில் ஹர்வாட்கர் மற்றும் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆதித்ய தாரே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்துவீச்சு தாக்குதலுக்கு அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்னி தலைமை தாங்குவார்.
ALSO READ: Road Safety World Series T20: சச்சின் முதல் கவாஸ்கர் வரை கிரிக்கெட் ஜாம்பவான்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR