சச்சினின் 10-ம் நம்பர் `ஜெர்சி`-க்கு என்னாச்சி?
இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின். இவர் ரசிகர்களால் `கிரிக்கெட் கடவுள்` என அழைக்கப்படுகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் 10-ம் எண் பொறித்த `ஜெர்சியை` அணிந்து விளையாடினார். இவரது ஓய்வுக்கு பிறகு இந்த எண் யாருக்கும் தரப்படாமல் இருந்தது.
இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின். இவர் ரசிகர்களால் 'கிரிக்கெட் கடவுள்' என அழைக்கப்படுகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் 10-ம் எண் பொறித்த 'ஜெர்சியை' அணிந்து விளையாடினார். இவரது ஓய்வுக்கு பிறகு இந்த எண் யாருக்கும் தரப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷார்துல் தாகூர், 10ம் எண் 'ஜெர்சியுடன்' களமிறங்கினார். இதற்கு சமூகவலைதளத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த 'ஜெர்சிக்கு' ஓய்வு தர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்து பிசிசிஐ கூறுயது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி, 'ஜெர்சியில்' பொறிக்கப்படும் எந்தவொரு எண்ணிற்கும் ஓய்வு தரக்கூடாது. ஆனால், சர்வதேச போட்டிகளில் 10-ம் எண் கொண்ட 'ஜெர்சியை' பயன்படுத்த வேண்டாம் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறியுள்ளது.