தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் சூப்பர் 1000 போட்டியில், கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் புதன்கிழமை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க சுற்றில் 27 வயதான கிடம்பி ஸ்ரீகாந்த் (Kidambi Srikanth), இந்தியாவின் சௌரப் வர்மாவை 21-12, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். சாய்னா நேவால் (Saina Nehwal) மலேசியாவின் கிசோனா செல்வதுரையை எதிர்த்து விளையாடி 21-15 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


இதற்கிடையில், கனடாவின் (Canada) ஜேசன் அந்தோனி ஹோ-ஷூவுக்கு எதிரான தனது முதல் சுற்று ஆட்டத்தை இந்தியாவின் பருபள்ளி கஷ்யப் வெற்றிகரமாக முடிக்கத் தவறினார். உலக தரவரிசைப் பட்டியலில் 24-வது இடத்தில் இருக்கும் கஷ்யப், மூன்றாவது கேமில் பின்தங்கிய நிலையில் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட காயத்தால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. முதல் கேமில் அவர் 9-21 என்று தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது சுற்றில் 21-13 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.


ஆண்கள் இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அபாரமாக ஆடி, தென் கொரிய ஜோடி கிம் ஜி ஜங் மற்றும் லீ யோங் டே ஆகியோரை 19-21 21-16 21-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. தங்கள் அபிமான இரட்டையரை வென்ற மகிழ்ச்சி இந்திய இரட்டையரின் முகத்தில் காணக்கிடைத்தது.


ALSO READ Twitter: சிறந்த கேப்டனாக செயல்பட்டது இம்ரான் கானா? விராட்டா?


"நாங்கள் இந்த விளையாட்டை விளைடாத் தொடங்கும் போது, லீ யோங் டே எங்களது ஆதர்ஷ வீரராக இருந்தார். ஆகையால் அவருடன் விளையாடியது இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வெற்றியில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று சாத்விக்சாய்ராஜ் போட்டிக்கு பின்னர் கூறினார். "எங்கள் விளையாட்டின் உத்தி முடிந்தவரை அடேக் செய்வதாக இருந்தது. அவசரப்படாமல் ஆடுவதிலே நாங்கள் கவனம் செலுத்தினோம். அவசரத்தால் முதல் ஆட்டத்தில் சில புள்ளிகளை விட்டுவிட்டோம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம்” என்று சிராக் மேலும் கூறினார்.


இந்தியாவுக்கான (India) மற்றொரு தோல்வியில், அர்ஜுன் மடதில் ராமச்சந்திரன் மற்றும் துருவ் கபிலா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறிவிட்டது. கடுமையான ஆட்டத்தை ஆடிய போதிலும், இந்திய ஜோடி மலேசியாவின் ஆங் யூ சின் மற்றும் தியோ ஈ-க்கு எதிராக 13-21 21-8 மற்றும் 24-22 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.


என் சிக்கி ரெட்டி மற்றும் சுமித் ரெட்டி பி ஆகியோரது கலப்பு இரட்டையர் ஜோடியும் வெற்றியை நழுவவிட்டது. இந்த ஜோடி, சுங் மேன் டாங் மற்றும் யோங் சூட் த்சேவிடம் 20-22, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.


பி.வி சிந்துவும் (PV Sindhu) இப்போட்டிகளில் இருந்து துவக்க நிலையிலேயே வெளியேறினார்.


ALSO READ: IND vs Aus: 4-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார் பும்ரா, காரணம் இதுதான்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR