துபாயில் கூல் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷியின் Birthday கொண்டாட்டம்
தல தோனியின் அன்பு மனைவி சாக்ஷி தோனி தனது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாகக் கொண்டாடினார். `கேப்டன் கூல்` எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி 1988 நவம்பர் 19 அன்று அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார்.
புதுடெல்லி: தல தோனியின் அன்பு மனைவி சாக்ஷி தோனி தனது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாகக் கொண்டாடினார். 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி 1988 நவம்பர் 19 அன்று அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார்.
புதுடெல்லி: ஐபிஎல் 2020 போட்டி முடிந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தனது குடும்பத்துடன் நேரத்தை அருமையாக செலவிடுகிறார்.
இன்று 'கேப்டன் கூல்' தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் (Sakshi Dhoni) பிறந்த நாள். காதல் மனைவியின் மறக்கமுடியாத தருணத்தை மிகவும் சிறப்பு வாய்ந்த முறையில் கொண்டாடினார் பொறுப்புள்ள கணவர் மகேந்திர சிங் தோனி.
ஐ.பி.எல் போட்டிகள் நடந்தபோது ,சாக்ஷி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வரவில்லை. எனவே தோனி தனது அன்பு மனைவியின் 32 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மகள் ஜீவா சிங் தோனி (Ziva Singh Dhoni) உடன் துபாய் சென்றார். இந்த மறக்கமுடியாத தருணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தோனி.
தனது சகோதரர் கபீருக்கும் பிறந்த நாள் என்று சாக்ஷி தெரிவித்துள்ளார். கபீரும் சகோதரியின் குடும்பத்துடன் துபாயில் இருக்கிறார். தோனியின் மகளின் இன்ஸ்டாகிராம் வீடியோவிலும் கபீர் இருக்கிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR