நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில மாதங்களுக்கு முன்பு, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை நேபாளின்
கவுசாலா பெருநகர காவல் துறையிடம் அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவரை சந்தித்தபோது, என்னை 2 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என கூறியுள்ளார்.


இந்த புகாரை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசராணையும் மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் அப்போது, வெஸ்ட் இண்டீஸ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என சமூக வலைதளங்களில் விளக்கமளித்தார். 


மேலும் படிக்க | இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கு; பவுண்டரி மழை பொழிந்த மில்லர் - கிளாசென் ஜோடி!


இதைத்தொடர்ந்து, அவரை நேபாளம் அழைத்துவர அந்நாட்டு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, தன் மீது பதியப்பட்ட இந்த வழக்கில் ஆஜராவதற்கு, சந்தீப் லம்மிச்சேன் இன்று விமானம் மூலம் நோபால் வந்தடைந்தார். அவர் நேபாளம் வருவது குறித்தும், தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருந்தார். 


இந்நிலையில், அவர் நேபாளம் வந்து இறங்கிய சில மணிநேரங்களிலேயே அவரை போலீசார் கைதுசெய்து தங்களின் காவலில் வைத்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது, அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்து அறிவித்தது. 


நேபாள நடிகர் பால் ஷா நடிக்க, சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரம் வெளிவந்த பின்னரே, சந்தீப் லமிச்சேனின் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த மே மாதம், பிரபல நேபாள பெண் மாடல் ஒருவர், தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அனுபவத்தை டிக்டாக் செயலில் தொடர் வீடியோவாக வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என போராட்டம் வெடித்தது. 


மேலும், கடந்தாண்டு மட்டும் 2300 பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், பல பேர் புகார் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ