கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற கனவில் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்கினார் சானியா. இருவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், எதிரில் விளையாடிய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டில் இருவருமே ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடினர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Australian Open: இறுதிப்போட்டியில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா


பரப்பாக நடைபெற்ற அந்த சுற்றை இறுதி வரை விடா மூச்சுடன் போராடி பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை கைப்பற்றியது. இரண்டாவது சுற்றில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் களம் கண்டது போபண்ணா மற்றும் சானியா மிர்சா இணை. ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு துளியும் கொடுக்காமல் எதிர்முனையில் 2வது சுற்றிலும் லூயிசா ஸ்டெபானி - ரஃபேல் மாடோஸ் இணை பிரம்மாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மீண்டும் அந்த சுற்றும் அவர்கள் வசமே சென்றது. 



இதனால், இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் லூயிசா ஸ்டெபானி - ரஃபேல் மாடோஸ் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதேநேரத்தில், கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருந்த சானியா மிர்சாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார். அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க | இந்திய அணியுடன் தோனி... சொந்த ஊரில் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல'


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ