கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மிகவும் பிரபலமான போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - மேட் பாவிக்குடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி அரையிறுதியை எட்டியது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் மற்றும் நீல்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை சானியா மிர்சா - மேட் பாவிக் இணை கைப்பற்றி அசத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓவ்வொரு நாட்டிலும் ஒருநாள் போட்டியில் தோனி அடித்த ரன்கள்!


அடுத்தடுத்த சுற்றுகளையும் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2வது சுற்றில் இருந்து டெசிரே கிராசிக் - நீல்குப்ஸ்கி இணை மீண்டது. சரிசம்மாக சென்று கொண்டிருந்த செட்டில் அடுத்தடுத்து இரு புள்ளிகளைக் கைப்பற்றி 2வது செட்டை அந்த ஜோடி தனதாக்கியது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. ஆனால், சானியா மிர்சா - மேட் பாவிக் இணை இந்த செட்டையும் தவறவிட்டு, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தனர்.



முடிவில் டெசிரே கிராசிக் - நீல்குப்ஸ்கி இணை 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா இணையை வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்தப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு சானியா மிர்சா உணர்ச்சிவசப்பட்டார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் பதிவில், விளையாட்டு உங்களிடம் இருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது. மனம், உடல், உணர்வு, வெற்றி தோல்வி, மணிக்கணக்கான கடின உழைப்பு, கடுமையான தோல்விக்குப் பிறகு தூக்கமில்லாத இரவுகள் என நிறைய எடுத்துக் கொள்கிறது. அதேநேரத்தில் மற்ற விஷயங்கள் கொடுக்க முடியாத பலனை விளையாட்டு கொடுக்கிறது.



விளையாட்டுக்காக நாம் சிந்தும் கண்ணீர், மகிழ்ச்சி, சண்டை போராட்டம், நம்முடைய உழைப்பு என அனைத்தும் மதிப்புக்குரியதாக மாறிவிடுகிறது. இதற்காக நான் என்றென்றும் கடமைப்பட்டிருப்பேன். இந்த முறை விம்பிள்டன் எனக்கானது இல்லை என நான் நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக விளையாடி வெற்றிகளை பெற்றிருக்கிறேன். இந்த முறை இழந்தாலும் அடுத்த முறை சந்திப்பேன் என உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார். அவரின் இந்தப் பதிவு டென்னிஸ் ரசிகர்களை மனங்களை கனக்கச் செய்துள்ளது. அவரின் விளையாட்டு அர்பணிப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து நம்பிக்கை வார்த்தைகளை ரசிகர்கள் ஆறுதலாக கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க | 2008-ல் பாண்டிங்கிற்கு தோனி கொடுத்த அந்த மெசேஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR