நேற்று நடைபெற்ற உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஸ்காட்லாந்து அணி.   டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது பங்களாதேஷ் அணி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற சீனியர் வீரர்கள் விளையாடினர்.  ஸ்காட்லாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோட்சர் ரன் ஏதும் இன்றி அவுட் ஆகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.  அதன் பின் களம் இறங்கிய அனைவரும் அடுத்தடுத்து வெளியேற ஸ்காட்லாந்து அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் மட்டுமே எடுத்தது.  அதன் பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் மற்றும் மார்க் வாட் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.


 



20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் அடித்தது.  பங்களாதேஷ் தரப்பில் மெஹ்தி ஹசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.  அதன் பின் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் அடுத்தது வெளியேறினர்.  ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17 ரன்கள் மட்டுமே அடித்தது.


 



இதனால் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.  இன்று இந்திய - இங்கிலாந்து அணிகளும், பாகிஸ்தான் - மேற்கு இந்திய தீவுகள் அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளன.


ALSO READ ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR