புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 2021 டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் மற்ற வீரர்களுடன் விராட் கோலி (Virat Kohli) நடந்து கொண்ட விதம் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் பிசிசிஐயிடம் புகார் அளித்திருந்தார். கிரிக்கெட் நெக்ஸ்ட் படி, இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் கேப்டன் விராட் கோலியின் அணுகுமுறை குறித்து பிசிசிஐயிடம் புகார் அளித்த்துள்ளார். கோலியின் கேப்டன்சி குறித்து பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


Also Read | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது 


ஒரு ஆதாரத்தின்படி, சில மாதங்களுக்கு முன்பு, விராட் கோலிக்கு எதிரான கிளர்ச்சி இந்திய அணிக்குள் தொடங்கியது. டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலி நடந்து கொண்ட விதம் குறித்து பல மூத்த வீரர்கள் வருத்தமடைந்ததாக தகவல்கள் உள்ளன. தகவல்களின்படி, ஒரு மூத்த வீரர் கோலிக்கு எதிராக பிசிசிஐ செயலாளரிடம் புகார் செய்தார். எனினும், அந்த மூத்த வீரர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


சிறிது நாட்களுக்கு முன்பு பிசிசிஐ வட்டாரம், 'கோலி கட்டுப்பாட்டை இழப்பதாகவும் மேலும் அவர் மரியாதையை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும் ஒரு சில வீரர்கள் அவரது அணுகுமுறையை விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. 


Also Read | CSK vs RCB: சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி புகைப்படத் தொகுப்பு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR