அபுதாபியில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 35-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது.
Match 35. It's all over! Chennai Super Kings won by 6 wickets https://t.co/lrAvDTCGHU #RCBvCSK #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆர்சிபியின் சுமாரான ஆட்டம் ரசிகர்களுக்கு சோகத்தைக் கொடுத்தது. பெரிய அளவிலான ரன்களை குவிக்க வேண்டும் என்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கனவை, தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி முறியடித்தது.
டுவெய்ன் ப்ராவோ ஆட்டநாயகன் விருது பெற்றார். விராட் கோலி சிறந்த கேட்ச் பிடித்ததற்காக ஒரு லட்ச ரூபாய் பரிசு பெற்றார்.
விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கெதிரான போட்டியை சிறப்பாக தொடங்கியது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி அணி.
Also Read | ரன்கள் அடிக்க சிரமப்படும் சஞ்சு சாம்சன்! கேப்டன்சி பிரசர் காரணமா?
இளம் வீரர் தேவதூத் படிக்கலுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கோஹ்லி, தொடக்க விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார், இரு பேட்டர்களும் தலா அரை சதங்களை அடித்தாலும், அடுத்தடுத்த விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் 156 ரன்களை மட்டுமே ஆர்.சி.பி அணி எடுத்தது.
சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் சென்னை அணிக்கு பக்கபலமாக இருந்தனர். இவர்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இறுதி 10 ஓவர்களில் ஆர்சிபியால் 66 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிந்த உடனேயே, ஆர்சிபி அணியின் குறைவான ரன்களால், டிவிட்டரில் ரசிகர்கள் மீம்களைப் போட்டு கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
1. How RCB started
2. How they finished pic.twitter.com/kXF6wW6a4K— Sagar (@sagarcasm) September 24, 2021
Also Read | IPL 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR