லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செரினா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த செரினா வில்லியம்ஸ் ஜெர்மனியின் கோர்ஜியஸை எதிர்கொண்டார்.



பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்து விளையாடிய கோர்ஜியஸை 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார்.


விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில், உலக அரங்கில் 11-வது நிலையில் உள்ள ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை கைப்பற்றினார். 


இதனையடுத்து வரும் ஜூலை 14-ஆம் நாள் மாலை 6.30 மணியளவில் நடைப்பெறவுள்ள இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செரினா வில்லியம்ஸ் போட்டியிடவுள்ளனர்.