அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதில், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.


இந்நிலையில், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



இன்று நடைபெற உள்ள முதல் சுற்று போட்டியில் ஜரினா தியாசை எதிர்கொண்டு விளையாடவிருந்த நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் குணமடையாததால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.


இதேபோன்று ரோஜர்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் காயம் காரணமாக செரீனா விலகினார். இதனால் கனடாவின் பியான்கா ஆண்ட்ரஸ்கு போட்டியின்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இதுகுறித்து செரீனா தெரிவிக்கையில்., "நான் ஞாயிற்றுக்கிழமை மேசனுக்கு வந்து, இன்றிரவு விளையாட எல்லாவற்றையும் தயாராக வைத்திருக்கிறேன், இன்று காலை எனது பயிற்சிக்குப் பிறகும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் முதுகு இன்னும் சரியாகவில்லை". என குறிப்பிட்டுள்ளார்.