ஐபிஎல் 2024 ஏலம் இன்னும் இரண்டு வாரத்தில் துபாயில் நடைபெறுகிறது. இதில் ஸ்டார் பிளேயர்கள் தூக்க 10 அணிகளும் பொறி வைத்து காத்திருக்கின்றன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சில பிளேயர்களுக்கு குறி வைத்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட பிளேயர்களை விடுவித்திருப்பதால் அவர்களுக்கு இணையான திறமை கொண்ட வீரர்களை எடுக்க வேண்டும் என எண்ணியிருக்கிறது. அதற்கேற்ப உள்ளூர் மற்றும் வெளிநாடு என சல்லடைபோட்டு தேடி வைத்திருக்கிறது. அவர்களை ஐபிஎல் ஏலத்தின்போது எடுக்க ஆர்வமாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏலத்தை ஆளப்போகும் இந்த 5 வீரர்கள்... இவர்களுக்கு கோடிகள் கொட்டப்போகுது!


அதேநேரத்தில் தோனி கேப்டன்சியின் கீழ் விளையாடவும் சில பிளேயர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் கிடைக்கும் சந்தர்பங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும், அதுவும் தோனி கேப்டன்சியின் கீழ் விளையாட வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதில் இருந்து கொஞ்சம் வேறுமாதிரியாக தோனிக்கு ஐஸ் வைத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 326 ரன்களை சேஸ் செய்தது. 


அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 83 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், தோனியின் அட்வைஸ் காரணமாக இப்போட்டியில் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்தார். ஒருமுறை தோனியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, போட்டியின் இக்கட்டான நேரங்களில் மனதில் நான் நினைக்கும் நேரத்தைவிட கூடுதல் நேரங்கள் விளையாடும்போது இருக்கும், போட்டியின் முடிவை எண்ணி பதற்றம் அடையக்கூடாது என தெரிவித்ததாக கூறினார்.


மேலும் படிக்க | சூர்யகுமார், தரமான கேப்டன் என நிரூபிச்சுட்ட..! கோப்பை பெற்ற பிறகு செஞ்ச சம்பவம்


அந்த அட்வைஸ் இந்த போட்டியின்போது உதவியதாகவும் ஷாய் ஹோப் கூறினார். இது உண்மையாக இருந்தாலும் கூட ஐபிஎல் ஏலம் நடக்கும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஷாய் ஹோப் இப்படி தெரிவித்திருப்பது தோனியை ஐஸ் வைக்கவே என்றும் சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர் சிறப்பாக ஆடியிருக்கும் ஷாய் ஹோப் அப்படி ஐஸ் வைத்தாலும் தப்பில்லை, அவர் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புவதை மறைமுகமாக கூறுகிறார் என சப்போர்டும் தெரிவித்துள்ளனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ