வங்காளதேச அணியின் கேப்டனான சாகிப் அல் ஹசன் IPL 2019 தொடரில் விளையாட தடையில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் சான்று அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன்(31). சமீபத்தில் வங்காளதேசத்தில் நடைபெற்ற வங்காளதேச பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய போது அவரது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.


இதனால் IPL 2019 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அவருக்கு IPL 2019 தொடரில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. 


எனினும், வங்காளதேசம் அயர்லாந்தில் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மே 7-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது தேவைப்பட்டால் சாகிப் அல் ஹசனை தேசிய அணிக்கு அழைத்துக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சௌதிரி தெரிவிக்கையில்., எதிர்வரும் போட்டிகளில் விளையாட சாகிப் அல் ஹசன் முழு உடல் தகுதி அடைந்துள்ளார். எனவே எதிர்வரும் IPL 2019 தொடரில் அவர் விளையாட எந்த தடையும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.