புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தலால் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பாராத மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் விளையாட்டும் விதிவிலகாக இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்படுவதும், போட்டிகள் நடைபெறும் இடம் மாற்றியமைக்கப்படுவதும் இரு ஆண்களாக தொடரும் கொரோனாவின் விளையாட்டாகவே தொடர்கிறது.


ஆனால், இந்த ஆண்டு பணக்கார போட்டிகளில் ஒன்றான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் மிகப்பெரிய மாறுதலுக்குக் காரணம் கொரோனா இல்லை.


இது வர்த்தகக் காரணம். இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், இந்த ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) டைட்டில் ஸ்பான்சராக மாறுகிறது.



சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ, இதுவரை ஐபிஎல் போட்டிகளின் முதன்மையான விளம்பரதாரராக இருந்து வந்தது. அந்த இடத்தை தற்போது இந்தியாவின் டாடா குழுமம் (Tata Group) பிடித்துவிட்டது.


இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


இந்த ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக்கின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்  சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மாற்றப்படலாம் என்ற செய்திகள் சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகின.


அந்த ஊகங்களை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முடிவு எடுக்கப்பட்டது. விவோ நிறுவனத்திற்கு பதிலாக, ஐபிஎல் ஸ்பான்சராக டாடா குழுமம் தயாராக உள்ளது என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


ALSO READ | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B


இந்த செய்தியை, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார். Vivo நிறுவனம், 2018-2022 வரை டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்காக, 2200 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருந்தது. 


ஆனால் 2020ல் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு ராணுவ மோதலுக்குப் பிறகு, Dream11ஐ மாற்றியதன் மூலம் விவோ பிராண்ட் நிறுவனம் ஓரு வருடம் ஸ்பான்சராக ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை.  


இருப்பினும், 2021 ஐபிஎல் போட்டிகலில் டைட்டில் ஸ்பான்சராக (Title sponsor) விவோ மீண்டும் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக திரும்பியது.


இந்த நிலையில், தற்போது டாடா குழுமம் ஐபிஎல் போட்டிகளுக்கான முதன்மையான மற்றும் டைட்டில் ஸ்பான்சராவதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.


இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இண்டியாவை, டாடா குழுமம் வாங்கியுள்ள நிலையில், தற்போது நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வர்த்தக மைல்கல்லாக ஐபிஎல் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக மாறியுள்ளது டாடா.


ALSO READ | IPL Mega Auction: பணக்கார பிரீத்தி ஜிந்தா! டெல்லி கேபிடல்ஸ் ஏழை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR