IPL Mega Auction: இந்தியன் பிரீமியர் லீக் 15வது சீசனுக்கான ஏலம் நெருங்கிவருகிறது. அனைத்து உரிமையாளர்களும் ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த முறை ஐபிஎல்லில் இரண்டு புதிய அணிகள் களமிறங்கவுள்ளன.
தற்போது இருக்கும் 8 அணிகளும் தங்களுக்கு பிடித்த வீரர்களை தக்கவைத்துள்ளன. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டித்தொடரில் இணையும் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தலா 3 வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடு டிசம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்துவிடும்.
மெகா ஏலத்தில், பஞ்சாப் அணியிடம் அதிக பணம் இருக்கும், அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியிடம் மிகக் குறைந்த தொகையே இருக்கிறது.
ALSO READ | IPL Auction 2022 ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்
24 வீரர்கள் கொண்ட முழு அணி
பிசிசிஐ விதிகளின்படி, அனைத்து அணிகளிடம் குறைந்தது 18 வீரர்களையும் அதிகபட்சமாக 24 வீரர்களும் இருக்கலாம். ஒரு அணியில் அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். மெகா ஏலத்தில் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் களத்தில் இறங்குவார்கள். பல அணிகள், ஏலத்தில் தங்களுக்கான கேப்டனையும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.90 கோடி கிடைக்கும்
பிசிசிஐ (BCCI) அனைத்து அணிகளும் 90 கோடி ரூபாயில் வீரர்களை வாங்கலாம் என்று உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. சில அணிகளிடம் பண இருப்பு அதிகமாக இருக்கும் நிலையில், சில அணிகளிடம் குறைவான பணம் உள்ளது.
சென்னை 4 வீரர்களையும், பஞ்சாப் 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. லக்னோ மற்றும் அகமதாபாத் தவிர, பஞ்சாப் அணியிடம் அதிக நிதி இருப்பு உள்ளது. டெல்லி அணியிடம் குறைந்த தொகை உள்ளது.
READ ALSO | IPL 2022 Auction: ஐபில் ஏலத்தில் இந்த வீரர்களுக்கு மவுசு இருக்காது?
ஐபிஎல் 15வது சீசனில் (IPL Mega Auction) வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக எந்த அணியிடம் எவ்வளவு பணம் எஞ்சி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:
மும்பை இந்தியன்ஸ் - 48 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 48 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 48 கோடி
டெல்லி கேபிடல்ஸ் - ரூ 47.5 கோடி
லக்னோ - 90 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - 72 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 68 கோடி
அகமதாபாத் - 90 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - 62 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 57 கோடி
ALSO READ | IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR