United States vs Pakistan: வியாழன் அன்று டல்லாஸ் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு சென்று இருந்த பாகிஸ்தாஸ் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வெற்றி கிரிக்கெட் உலகை திகைக்க செய்துள்ளது. பாக்கிஸ்தான் செட் செய்த 160 ரன்களை சேஸ் செய்த அமெரிக்கா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் முகமது அமிர் சூப்பர் ஓவரில் 3 வைடுகளை விட்டுக் கொடுக்க ஆறு பந்துகளில் 18/1 என்ற வலுவான நிலையை அமெரிக்கா அடைந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2024: 35 வயதுக்கும் மேல் விளையாடும் 10 வீரர்கள்... மூத்த வீரர் யார் தெரியுமா?


போட்டியின் 19வது ஓவரை சிறப்பாக வீசிய அமீரால் சூப்பர் ஓவரில் நன்றாக செயல்பட முடியவில்லை. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பந்துவீச்சைத் தொடங்கிய அமெரிக்கா சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் நோஸ்துஷ் கென்ஜிகே நான்கு ஓவர்களில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் உட்பட 3-30 எடுத்து அசத்தினார். ரிஸ்வான், ஃபகார் ஜமான், உஸ்மான் கான் என பாகிஸ்தான் டாப் ஆர்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 26/3 என்ற மோசமான நிலையில் இருந்த பாகிஸ்தானை கேப்டன் பாபர் அசாம் காப்பாற்றினார்.



அசாம் 43 பந்துகளில் 44 ரன்களும் மற்றும் ஷதாப் கான் 25 பந்தில் 40 ரன்களும் அடிக்க 72 ரன்கள் பார்ட்னர்ஷிப்பு 26-3 என்ற மோசமான நிலையில் இருந்தது மீட்டது. டெய்லண்டர் ஷஹீன் ஷா அப்ரிடி கடைசியில் சிறப்பாக விளையாடி 23 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் அடித்தது. சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய அமெரிக்கா பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். மோனாங்க் படேல், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் அதிரடியில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது. பிறகு சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.


இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்


வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணி நியூ யார்க்கில் பிளாக்பஸ்டர் சந்திப்பில் பரம எதிரியான இந்தியாவை எதிர் கொள்ள உள்ளது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட தோல்வி அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதால் கடினமான சவாலை எதிர்கொள்ள உள்ளது. மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அயர்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பலமான அணியாக வருகிறது.


மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ