நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் இளமையான டாப் 8 வீரர்களை இதில் காணலாம்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் தற்ரோது அமெரிக்காவிலும் மேற்கு இந்திய தீவுகளிலும் நடைபெற்று வருகிறது.
8. ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீனுக்கு வயது 25 ஆகும். இவர் இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 139 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
7. நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவுக்கு வயது 24 ஆகும். இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 214 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
6. தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸிக்கு வயது 23 ஆகும். இதுவரை 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 139 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
5. மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷமார் ஜோசப்பிற்கு வயது 24 ஆகும். இதுவரை 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
4. இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வயது 22 ஆண்டுகள் ஆகும். இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 502 ரன்களை குவித்துள்ளார்.
3. வங்கதேச வீரர் தன்சிம் ஹாசனுக்கு வயது 21 ஆகும். இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
2. பாகிஸ்தான் வீரர் நசீம் ஷாவுக்கு வயது 21 ஆகும். இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
1. நேபாள நாட்டைச் சேர்ந்த குல்ஷன் ஜாவுக்கு வயது 18 ஆகும். இவர் 30 சர்வதேச போட்டிகளில் விளையாடி 376 ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.