தோள்பட்டை காயம் காரணமாக IPL 2019-ல் இருந்து வெளியேறும் ஜாதவ்!
தோள்பட்டை காயம் காரணமாக இனி வரும் IPL 2019 தொடரின் போட்டிகளில் கேதர் ஜதவ் விளையாட மாட்டார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
தோள்பட்டை காயம் காரணமாக இனி வரும் IPL 2019 தொடரின் போட்டிகளில் கேதர் ஜதவ் விளையாட மாட்டார் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேதர் ஜாதவிற்கு அடிப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், எதிர்வரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியாது எனவும் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் போட்டிகளில் கேதர் ஜாதவ் இடம்பெறமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிளமிங் தெரிவிக்கையில்., ஜாதவிற்கு நாளை x-ray மற்றும் scan பறிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவரின் நலனுக்காக நாங்கள் பிராத்திக்கின்றோம்., ஆனால் அவர் வரும் போட்டிகளில் எங்களுடன் தொடருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனினும் எதிர்வரும் உலக கோப்பை தொடருக்குள் அவர் தனது உடல் நிலையினை சரிசெய்துவிடுவார் எனவும் பிளமிங்க தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெற்று இருந்தார். உலக கோப்பை தொடர் துவங்க 30 நாட்கள் உள்ள நிலையில் தற்போது கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஓய்வு எடுத்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மட்டும் அல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வேதனைக்கு ஆளாகியுள்ளது.
34-வயது ஆகும் இளம் வீரர் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றார். குறைந்த பந்தில் விரைந்து ரன் எடுக்கும் திறன் படைத்த ஜாதவ், பார்ட் டைம் பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
இதுகுறித்து ஜாதவ் தெரிவிக்கையில்., "கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் தங்கள் நாட்டு உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்பது கனவு, எனக்கும் அந்த கனவு உண்டு. கனவு நினைவாகும் நேரத்தில் இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். விரைவில் மீண்டு வருவேன்" என தெரிவித்துள்ளார்.