மும்பை: டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 சீசனில் இருந்து விலகினார் ஸ்ரேயாஸ் ஐயர். 
காயத்தின் தீவிரம் காரணமாக ஐபிஎல் 2021இன் முழு சீசனிலும் அவர் கலந்துக் கொள்ளமாட்டார் என்று சொல்லப்பட்டது. தற்போது ஸ்ரேயாஸ் ஐயரின் சிகிச்சை குறித்து பெரிய செய்தி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது அண்மை புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். தனது ரசிகர்களுக்கும் நல்ல  செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். 'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது, சிங்கம் போன்ற உறுதியுடன் விரைவில் திரும்புவேன். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி' என்று தனது சமூக ஊடக கணக்கில் எழுதியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். 


மார்ச் 23 அன்று நடந்த ஒருநாள் போட்டியின் போது, ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. இங்கிலாந்தின் இன்னிங்ஸின் 8 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாக்கூரின் (Shardul Thakur) ஷாட்டை தடுக்கும் முயற்சியில் ஸ்ரேயாஸ் டைவ் செய்தபோது காயமடைந்தார் ஸ்ரேயாஸ். 


Also Read | IPL 2021: CSK-வை வீழ்த்த நான்கு முக்கிய டிப்ஸ் அளித்தார் DC coach ரிக்கி பாண்டிங்


காயமடைந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முழு சம்பளம் கிடைக்கும்
இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிவிட்டாலும், டெல்லி கேபிடல்ஸ் அணி அவருக்கு முழு சம்பளத்தை வழங்கும். டெல்லி அணியில் முக்கிய வீரரான ஸ்ரெயாஸின் சம்பளம் 7 கோடி ரூபாய் ஆகும். ஒரு சீசன் ஐ.பி.எல் தொடருக்கு 7 கோடி ரூபாய் அவருக்கு கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 'விளையாட்டு வீரர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்' அவர்களுக்கு முழுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லியின் கேப்டனாக ரிஷப் பந்த் 
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் டெல்லி அணியுடன் ஐபிஎல் அணியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கிறார்.  


Also Read | IPL 2021 சென்னையில் முதல் போட்டியில் சாம்பியன் MI அணியி எதிர்கொள்ளும் RCB 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR