IPL 2021 சென்னையில் முதல் போட்டியில் சாம்பியன் MI அணியை எதிர்கொள்ளும் RCB

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் சென்னையில் இன்னும் சில மணி நேரத்தில் தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2021, 08:56 PM IST
  • சென்னை சேப்பாக்கத்தில் IPL 2021 முதல் போட்டி
  • நடப்பு சாம்பியன் MI அணியை எதிர்கொள்ளும் RCB
  • கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் ஐபிஎல் 2021
IPL 2021 சென்னையில் முதல் போட்டியில் சாம்பியன் MI அணியை எதிர்கொள்ளும் RCB  title=

IPL 2021: இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் சென்னையில் இன்னும் சில மணி நேரத்தில் தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிகிழமை (9ம் தேதி) சென்னையில் தொடங்குகிறது. ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடைபெறவுள்ள IPL 2021 தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். 

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5முறை கோப்பையை வென்றுள்ளது. அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read | IPL 2021: CSK-வை வீழ்த்த நான்கு முக்கிய டிப்ஸ் அளித்தார் DC coach ரிக்கி பாண்டிங்

ஆனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிரான அண்மை தொடர்களில் வெற்றி வாகை சூடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,  RCBயின் கேப்டன். அவர் தனது தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார்.

இந்த முறை கோப்பை வென்றேஎ தீர வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகக்கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஐபிஎல் (2020) சீசன் கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதற்கு பிசிசிஐ சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Also Read | பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது ஏன்?

2021 சீசன் இந்தியாவில் ஆறு மைதானங்களில் நடைபெறுகிறது என்பதும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் கவலைகளை அதிகரித்துள்ளது.  

இதனால் பிசிசிஐ பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்கள், பணியாளர்கள், மைதானத்தை பராமரிப்பவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

நாளைய முதல் போட்டியில் பங்கு பெறவிருந்த ஆர்சிபி அணியின் டேனியல் சாம்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஆர்சிபி அணியின் படிக்கல், டெல்லி அணியின் அக்சார் பட்டேல், மும்பை வாங்க்டே மைதானத்தின் பணியாளர்கள் 8 பேர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பிசிசிஐயின் சவால்களை அதிகரித்துள்ளது.

ALSO READ: உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News