Shubman Gill vs Jhonny Bairstow Viral Video In Tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி (IND vs ENG 5th Test) இன்றைய அதன் மூன்றாவது நாளிலேயே நிறைவடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஸ்டோக்ஸ் - மெக்கலமின் பாஸ்பால் அணுகுமுறையை இந்திய அணி தவிடுபொடியாக்கி உள்ளது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தை சாய்த்த அஸ்வின் 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து 218 ரன்கள் எடுக்க, இந்திய அணி (India National Cricket Team) முதல் நாள் மூன்றாம் செஷன் முதல் இன்று காலை முதல் செஷன் வரை பேட்டிங் செய்து 477 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இன்று காலை குல்தீப் யாதவின் விக்கெட்டை கைப்பற்றி தனது சர்வதேச அளவில் தனது 700ஆவது விக்கெட்டை ஆண்டர்சன் இன்று கைப்ற்றினார்.


இந்திய அணி (Team India) இங்கிலாந்தை விட 259 ரன்களை முன்னிலை பெற்றது. அதன்படி, இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கான பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப் ஆகியரை அஸ்வின் வரிசையாக முதல் செஷனிலேயே ஆட்டமிழக்கச் செய்தார்.


மேலும் படிக்க | சர்ஃபராஸ் கான் முதலில் இந்த பாடத்தை கத்துக்கணும்... மோசமான அவுட் - கிழித்தெடுத்த மூத்த வீரர்!


தொடர் நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்


தொடர்ந்து அதிரடி காண்பித்த பேர்ஸ்டோவை குல்தீப் யாதவும், பென் ஸ்டோக்ஸை அஸ்வினும் மதியு உணவு இடைவேளைக்கு முன்னரே ஆட்டமிழக்கச் செய்தனர். இதில் ஸ்டோக்ஸ் டக்அவுட்டானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, கிறிஸ் ஃவோக்ஸின் விக்கெட்டையை இரண்டாவது செஷனின் தொடக்கத்திலேயே எடுத்த அஸ்வின் தனது 36ஆவது 5 விக்கெட் ஹாலை எடுத்தார். 


ரூட் மட்டும் கடைசி வரை போராடினாலும் அவர் சதம் அடிக்க பெரிய ஷாட்டுக்கு போக 84 ரன்களில் அவுட்டானார். இதன்மூலம், இங்கிலாந்து அணி (Team England) 195 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. மேலும், இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானார், தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வானார். குறிப்பாக, இது அஸ்வின் மற்றும் பேர்ஸ்டோவ் (Jhonny Bairstow) ஆகியோருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதில் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


வைரலாகும் வீடியோ


மறுபுறம் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ்வுக்கும், இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் (Shubman Gill), துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. அதிலும் கில் - பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சூடான வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர்களுக்கு இடையேயான உரையாடலை இங்கு காணலாம். 



பேர்ஸ்டோவ் - கில் வாக்குவாதம்


முதலில் பேர்ஸ்டோவ்வுக்கு ஜூரேலுக்கு இடையே ஏதோ உரையாடல் நடந்துவர, அப்போது பேர்ஸ்டோவ் கில்லை நோக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


பேர்ஸ்டோவ்: "நீ சோர்வாகி, ஜிம்மி உன்னை அவுட்டாகிய பின் அவரிடம் என்ன கூறுவாய்?" என ஆக்ரோஷமாக கேட்டார்.


கில்: அதற்கு என்ன இப்ப, நான் 100 அடிச்சதுக்கு அப்புறம்தான அவுட்டாக்கினார், நீ இப்போ எத்தனை ரன் அடிச்சிருக்க?" என அதே ஆக்ரேஷத்துடன் பதிலடி கொடுத்தார். 


உடனே சர்ஃபராஸ் கான்: "இன்று கொஞ்ச ரன்களை அடிச்சிட்டு, ரொம்ப துள்ளுறாரு" என பேர்ஸ்டோவ்விடம் வம்பிழுத்தார். பேர்ஸ்டோவ் அந்த வாக்குவாதம் நடந்த ஓவரிலேயே குல்தீப்பிடம் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு! ஒரு நாள் வருமானம் மட்டும் இவ்வளவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ